தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

பொருளாதார ஊக்குவிப்பு திட்டத்தை அறிவிக்கிறார் நிதியமைச்சர்! - நிதியமைச்சர் நிர்மலா சீதாரான்

டெல்லி: மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாரான் மாலை நான்கு மணிக்கு நடைபெறும் செய்தியாளர் சந்திப்பில் பொருளாதார ஊக்குவிப்பு திட்டங்களை அறிவிக்கவுள்ளார்.

Nirmala Sitharaman
Nirmala Sitharaman

By

Published : May 13, 2020, 1:10 PM IST

நாடு முழுவதும் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. இந்நிலையில் செவ்வாய்க்கிழமை மக்களுக்கு உரையாற்றிய பிரதமர் மோடி, "20 லட்சம் கோடி ரூபாய் மதிப்பில் பொருளாதார ஊக்குவிப்பு திட்டங்கள் அறிவிக்கப்படும்.

இது நாட்டின் ஒட்டுமொத்த உள்நாட்டு உற்பத்தியில் 10 விழுக்காடு. இந்த ஊக்குவிப்பு திட்டத்தின் மூலம் நாட்டின் பலதரப்பட்ட மக்கள் பயன்பெறுவர். அடுத்து இரண்டு மூன்று நாள்களில் இது குறித்த தகவல்களை நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் வெளியிடுவார்" என்றார்.

பிரதமரின் அறிவிப்பைத் தொடர்ந்து, புதன்கிழமை (இன்று) மாலை நான்கு மணிக்கு நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், பொருளாதார ஊக்குவிப்பு திட்டங்கள் குறித்த தகவல்களை வெளியிடவுள்ளார்.

முன்னதாக, மார்ச் மாதம் நிர்மலா சீதாராமன் 1.7 லட்சம் கோடி ரூபாய் மதிப்பிலான பொருளாதார ஊக்குவிப்பு திட்டங்களை அறிவித்தார். ஏழைகளின் கைகளில் உணவும் பணமும் சென்று சேர வேண்டும் என்பதைக் கருத்தில்கொண்டு இந்த ஊக்குவிப்பு திட்டம் அறிவிக்கப்படுவதாகவும் அவர் குறிப்பிட்டார்.

இந்த அறிவிப்பைத் தொடர்ந்து இந்திய பங்குச் சந்தை பெரும் ஏற்றம் கண்டு வர்த்தகமாகிவருகிறது.

இதையும் படிங்க: பொருளாதார ஊக்குவிப்பு திட்டம் எதிரொலி - உயரும் இந்திய பங்குச் சந்தை!

ABOUT THE AUTHOR

...view details