தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

கரோனா: டெல்லியில் 23 விழுக்காடு மக்கள் பாதிப்பு - கரோனா டெல்லி பாதிப்பு

டெல்லியில் 23 விழுக்காட்டுக்கும் மேற்பட்ட மக்கள் கரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளதாக ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளது.

23 % Delhi population exposed to COVID-19
23 % Delhi population exposed to COVID-19

By

Published : Jul 22, 2020, 7:57 AM IST

டெல்லியில் ரத்த மாதிரிகளை பரிசோதித்து சீரத்தை கண்காணிப்பது தொடர்பான ஆய்வை மத்திய சுகாதார மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சகம் மேற்கொண்டுள்ளது. டெல்லி அரசுடன் இணைந்து தேசிய நோய்க் கட்டுப்பாட்டு மையம் இந்த ஆய்வை கடந்த ஜூன் 27 முதல் ஜூலை 10 வரை டெல்லியில் நடத்தியது.

டெல்லியின் 11 மாவட்டங்களிலும் அமைக்கப்பட்ட கணக்கெடுப்பு குழு, ஐ.சி.எம்.ஆர் ஒப்புதல் அளித்த கோவிட் கவாச் எலிசாவைப் பயன்படுத்தி ஐ.ஜி.ஜி ஆன்டிபாடிகள் மற்றும் தொற்றுநோய்யைக் கண்டறிய 20,000க்கும் மேற்பட்ட நபர்களின் ரத்த மாதிரிகளை சேகரித்து பரிசோதிக்கப்பட்டன. எலிசா பரிசோதனை முறையைப் பயன்படுத்தி நாட்டில் மேற்கொள்ளப்பட்ட மிகப் பெரிய சீரம்-பரவல் ஆய்வு இதுவாகும். இந்தப் பரிசோதனைகள் பொதுமக்களிடம் ஆன்டிபாடிகள் உள்ளனவா என்பதை கண்டறிவதற்காக மேற்கொள்ளப்பட்டன.

இந்த ஆய்வின் முடிவில் டெல்லியில், 23.48 விழுக்காடு மக்களிடையே ஐஜிஜி ஆன்டிபாடிகளின் பாதிப்பு காணப்படுவதாக கண்டறியப்பட்டுள்ளது. அதேசமயம், கோவிட் தொற்றால் பாதிக்கப்பட்ட ஏராளமான நபர்கள் அறிகுறிகள் ஏதும் இல்லாமல் இருக்கிறார்கள் என்பதும் இந்த ஆய்வில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இப்பெருந்தொற்றால் டெல்லியில் 23.48 விழுக்காடு மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.

இது குறித்து தேசிய நோய்க் கட்டுப்பாட்டு மையத்தின் (என்சிடிசி) இயக்குநர் சுஜித் குமார் சிங் கூறுகையில், "அரசு மேற்கொண்ட ஊரடங்கு உத்தரவு, பரவல் தடுப்பு கண்காணிப்பு உள்ளிட்ட பல்வேறு நடவடிக்கைகளாலும் குடிமக்கள் பின்பற்றிய செயல்முறைகளாலும் தொற்று கட்டுப்படுத்தப்பட்டுள்ளது. இருப்பினும், கணிசமான மக்கள், தொற்றினால் பாதிக்கப்படக் கூடிய வாய்ப்பும் உள்ளதால், பரவல் தடுப்பு நடவடிக்கைகளை இதே தீவிரத்துடன் தொடர்ந்து கடைபிடிக்க வேண்டும்" என்றார்.

இதனிடையே கோவிட் -19 தொற்றுநோயைக் கண்டறிய ஆர்டி-பி.சி.ஆர் மற்றும் ரேபிட் ஆன்டிஜென் டெஸ்ட் (ராட்) நடத்தப்பட்டது. இதையடுத்து கடந்த ஜூன் 18 முதல் ஜூலை 21 வரை டெல்லியில் 3,63,172 பேருக்கு ராபிட் ஆன்டிஜன் சோதனைகள் மேற்கொள்ளப்பட்டன. அதில், 23 ஆயிரம் பேருக்கு (6.3%) கரோனா வைரஸ் இருப்பது உறுதி செய்யப்பட்டது. மேலும், 2294 பேருக்கு கரோனா இல்லை என்பது ஆய்வு முடிவில் தெரிய வந்தது. பின்னர் 2294 பேருக்கு நடத்தப்பட்ட ஆர்டி-பிசிஆர் சோதனையில் 348 பேருக்கு தொற்று இருப்பது உறுதியானது.

இதனிடையே, இந்தியாவில் கட்டுப்பாட்டு மண்டலங்களில் ஐ.சி.எம்.ஆர் தொடங்கிய செரோ-கணக்கெடுப்பின் படி அகமதாபாத்தில் கரோனாவால் 34 விழுக்காடு மக்களும், மும்பை, கொல்கத்தாவில் 35 விழுக்காடு மக்களும் பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

ABOUT THE AUTHOR

...view details