தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

ரம்மியில் 10.50 லட்ச ரூபாயை கோட்டைவிட்ட மகன் - தந்தைக்கு நெஞ்சுவலி!

மும்பை: இணையத்தில் சீட்டாடி ரூபாய் 10 லட்சத்து 50 ஆயிரத்தை கோட்டைவிட்ட இளைஞர் காவல் துறையினரிடம் வசமாக சிக்கினார். தன் வங்கி கணக்கிலிருந்து பணத்தை திருடி மகன் சூதாடியதையறிந்து நெஞ்சுவலி ஏற்பட்டு தந்தை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

ஆன்லைன் சூதாட்டம்
ஆன்லைன் சூதாட்டம்

By

Published : Jun 28, 2020, 1:52 AM IST

விக்கி சலேக்பல் திகன் (24) எனும் இளைஞர் நாசிக்கின் ஜெய் பவானி சாலையில் வசித்து வருகிறார். இவர் சைபர் பிரிவு காவல் துறையிடம் புகார் ஒன்றை அளித்தார். அதில், “தனது வங்கிக் கணக்கிலிருந்து 10 லட்சத்து 50ஆயிரம் ரூபாய் கையாடல் செய்யப்பட்டுள்ளது” என்றிருந்தது.

அப்புகார் குறித்து விசாரித்த காவல் துறையினருக்கு அதிர்ச்சியளிக்கும் தகவல் கிடைத்தது. அதனைக் கொண்டு விக்கியை கைது செய்தனர். ஆம், பணத்தை கையாடல் செய்ததே விக்கிதான். தன் தந்தை வங்கிக் கணக்கிலிருந்து ரூ.10.50 லட்சம் பணத்தை இணையத்தில் சூதாட பயன்படுத்தியுள்ளார். அதில் தோற்று, மொத்த பணத்தையும் இழந்துள்ளார். தன் தந்தையை நம்ப வைக்க இந்த நாடகத்தை நிகழ்த்தியுள்ளார்.

விக்கியின் தந்தை தனது சொந்த மாநிலமான உத்தர பிரதேசத்தில் உள்ள வீட்டை விற்றுப் பெற்ற 18 லட்சத்து, 59ஆயிரம் பணத்தை பஞ்சாப் நேஷனல் வங்கியில் இருப்பு வைத்துள்ளார். இந்த பணத்தைக் கொண்டு நாசிக்கில் ஒரு வீட்டை வாங்க விக்கியின் தந்தை திட்டமிட்டிருந்தாராம். இந்தச் செய்தியை கேட்ட அவருக்கு நெஞ்சுவலி ஏற்பட்டு தீவிர மருத்துவ சிகிச்சைப் பிரிவில் சிகிச்சை பெற்று வருவதாக காவல் துறையினர் தெரிவித்தனர்.

ABOUT THE AUTHOR

...view details