இந்திய விண்வெளி ஆய்வு மையம் இஸ்ரோ கடந்த மாதம் 22ஆம் தேதி சந்திரயான் 2 விண்கலத்தை நிலவுக்கு அனுப்பியது. இதுவரை யாரும் சென்றிடாத நிலவின் தென் துருவப்பகுதியை ஆய்வு செய்வதற்காக விக்ரம் என்ற லேண்டரை விண்கலத்துடன் அனுப்பிய இஸ்ரோ, fடந்த செப் 7ஆம் தேதி லேண்டர் தரையிறக்கத்தின் போது ஏற்பட்ட தொழில்நுட்ப கோளாரால் சிக்னலை இழந்தது.
விக்ரம் லேண்டரை கண்டுபிடிப்பதில் சிரமம்... கைவிரித்த நாசா?
சந்திரயான் 2 விண்கலத்தின் லேண்டரான விக்ரமை கண்டுபிடிக்கும் முயற்சியில் முன்னேற்றம் எதுவும் இல்லை என நாசா தரப்பு வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
இதனால் விஞ்ஞானிகள் மட்டுமல்லாது ஒட்டுமொத்த இந்திய மக்களும் பெரும் ஏமாற்றம் அடைந்தனர். தொலைந்து போன விக்ரம் லேண்டரை கண்டுபிடிக்க அமெரிக்க விண்வெளி ஆய்வு நிறுவனம் நாசா இந்தியாவுக்கு உதவிக்கரம் நீட்டியது. நாசாவின் (எல்.ஆர்.ஓ.) என்ற ஆர்பிட்டர் விக்ரமை கண்டுபிடித்து படமெடுத்துத்தர தீவிர முயற்சியை இரு நாட்களாக மேற்கொண்டு வருகிறது.
இருப்பினும் இந்த முயற்சியில் எந்தவித முன்னேற்றமும் இல்லை என்று நாசா தரப்பு வட்டாரங்கள் தெரிவித்துள்ளது. விக்ரமிடருந்து எந்தவொரு சிக்னலும் நாசா ஆர்பிட்டருக்கு கிடைக்காததால், விக்ரம் லேண்டர் கண்டுபிடிப்பதில் சிரமம் ஏற்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து அதிகாரப்பூர்வ அறிவிப்பு நாசா தரப்பிலிருந்து விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.