தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

பயிர் கழிவுகளை எரிப்பதால் டெல்லியில் காற்று மாசு... - காற்று மாசு

ஹரியானா, பஞ்சாப் ஆகிய மாநிலங்களில் விவசாயிகள் பயிர் கழிவுகளை எரிப்பதால் டெல்லியில் காற்றின் மாசு பெருமளவு உயர்ந்துள்ளதாக நாசா தகவல் தெரிவித்துள்ளது

பஞ்சாப் ஹரியானா தீ

By

Published : Oct 30, 2019, 12:08 AM IST

டெல்லியின் சுற்றுச்சூழல் மந்திரி கைலாஷ் கஹ்லோட் அலுவலகத்திலிருந்து ஒரு அறிக்கை வெளியிடப்பட்டது. அதில் "சமீபத்திய நாசா படங்கள், ஹரியானா பஞ்சாப் மாநிலங்களில் 24 மணி நேரத்தில் பெருமளவு காற்று மாசுபட்டுள்ளது. இதற்கு அம்மாநில மக்கள் கழிவுகளை எரிப்பதால் ஏற்பட்டுள்ளது.

கடந்த 24 மணி நேரத்தில் பஞ்சாப், ஹரியானா ஆகிய மாநிலங்களில் கழிவுகளை எரித்து அதன் மூலம் உமிழும் காற்று மாசின் அளவானது 1,654லிருந்து 2,577ஆக அதிகரித்துள்ளது.

கடந்த பல ஆண்டுகளில் தீபாவளி சமயத்தில் காற்று மாசு தூய்மையாக இருந்தபோதிலும், பஞ்சாப் மற்றும் ஹரியானாவிலிருந்து பயிர்க் கழிவுகளை விவசாயிகள் எரிப்பதால் டெல்லியின் காற்றின் தரத்தைக் கடுமையாகப் பாதித்துள்ளதாக நாசா புகைப்படம் வெளியிட்டுள்ளது” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

ABOUT THE AUTHOR

...view details