நிலவின் தென் துருவத்தை ஆய்வு செய்யும் நோக்கில் இந்திய விண்வெளி நிறுவனமான இஸ்ரோ, சந்திரயான் 2 எனும் விண்கலத்தை நிலவுக்கு அனுப்பியது. விண்கலத்தில் பிக்ரயான் எனும் ஆய்வூர்தியும் அதனை ஏந்தியவாறு விக்ரம் எனும் லேண்டரும் எடுத்துச்செல்லப்பட்டது.
இதையடுத்து, செப்டம்பர் 7ஆம் தேதி விக்ரம் லேண்டரை தரையிறக்க இஸ்ரோ முயன்றது. ஆனால், கடைசி நொடியில் ஏற்பட்ட தொழில்நுட்ப கோளாறு காரணமாக விக்ரம் லேண்டர் இஸ்ரோவின் தொடர்பிலிருந்து விலகிச் சென்றது.
இந்நிலையில், இஸ்ரோவின் தொடர்பிலிருந்து விலகிச்சென்ற விக்ரம் லேண்டரை நிலவின் மேல் பரப்பில் கண்டறிந்ததாக அமெரிக்க விண்வெளி நிறுவமான நாசா தெரிவித்துள்ளது.