இந்தியாவில் கோவிட்-19 வைரஸ் பரவலைக் கட்டுப்படுத்த நாடு முழுவதும் தற்போது ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டுள்ளது. இந்நிலையில், ஏப்ரல் மூன்றாவது வாரத்தில் டெல்லியைச் சுற்றியுள்ள பகுதிகளில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட வாய்ப்புள்ளதாக அமெரிக்காவின் விண்வெளி ஆய்வு மையமான நாசா கணித்துள்ளதாகச் செய்திகள் பரவின.
இத்தகவலுக்கு வலு சேர்க்கும் வகையில், கடந்த ஞாயிற்றுக்கிழமை ரிக்டர் அளவில் 3.4ஆக பதிவான மிதமான நில அதிர்வு டெல்லியில் ஏற்பட்டது. இது மக்களிடையே இருந்த அச்சத்தைப் பல மடங்குகள் உயர்த்தியது.
ஆனால், சமூக வலைத்தளங்களில் பரவும் இந்தச் செய்தி போலியானது என்று பத்திரிகை தகவல் பணியகம் மறுப்பு தெரிவித்துள்ளது.