'நாசா' விண்வெளி ஆராய்ச்சி மையம் வரும் 27ஆம் தேதி சர்வதேச விண்வெளி நிலையத்திற்கு பால்கான் 9 ராக்கெட் மூலம் 'ஸ்பேஸ்எக்ஸ் க்ரூ டிராகன்' விண்கலத்தைச் செலுத்துகிறது. இதில், நாசா விண்வெளி வீரர்கள் ராபர்ட் பெஹன்கென், டக்ளஸ் ஹர்லி ஆகியோர் பயணிக்கின்றனர்.
இது குறித்து நாசா வெளியிட்ட அறிக்கையில், "விண்வெளி பயணத்துக்குத் தயாராகும் குழுவினர், 'விமான குழு சுகாதார உறுதிப்படுத்தல்' திட்டத்தின்படி விண்கலம் செலுத்தப்படுவதற்கு சில வாரங்களுக்கு முன்பு மருத்துவச் சோதனைக்குள்படுத்தப்படுவர்.
அந்த வகையில், நாட்டில் நிலவும் கரோனா வைரஸ் (தீநுண்மி) அச்சத்தால் விண்வெளி வீரர்கள் இரண்டு வாரங்களுக்குத் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.