ஜெட் ஏர்வேஸ் நிறுவனம் கடும் நிதி நெருக்கடி காரணமாக மே 17ஆம் தேதி முதல் விமான சேவைகளை நிறுத்திக் கொண்டது. அந்த நிறுவனத்தில் பணிபுரிந்த ஊழியர்கள் நிலுவை ஊதியத்தை வழங்கக் கோரி தொடர் போராட்டங்களில்ஈடுபட்டுவருகின்றனர். இந்த நிலையில், ஜெட் ஏர்வேஸ் நிறுவனர் நரேஷ் கோயல் லண்டனுக்குச் செல்ல தனது மனைவியுடன் மும்பையிலிருந்து எமிரேட்ஸ் ஏர்வேஸ் விமானத்தில் செல்ல இருந்தார்.
ஜெட் ஏர்வேஸ் நிறுவனர் நரேஷ் கோயலுக்கு விமானத்தில் அனுமதி மறுப்பு
மும்பை: ஜெட் ஏர்வேஸ் நிறுவனத்தின் நிறுவனர் நரேஷ் கோயல், அவரது மனைவி லண்டனுக்கு செல்ல இருந்த நிலையில், அவர்கள் இருவரையும் குடியேற்றத் துறை அலுவலர்கள் தடுத்து நிறுத்தி உள்ளனர்.
Naresh goyal
இவர்கள் இருவரும் விமானத்தில் அமர்ந்திருந்தபோது, அங்குவந்த குடியேற்றத் துறை அலுவலர்கள் அவர்களை கீழே இறக்கி, அவர்களது உடமைகளையும் கீழே இறக்கினர். மேலும், நரேஷ் கோயல், அவரது மனைவி தடுத்து நிறுத்தப்பட்டதற்கான காரணம் குறித்து அலுவலர்கள் எதுவும் கூறவில்லை. இந்தச் சம்பவத்தால் விமானம் ஒருமணி நேரம் தாமதமாக புறப்பட்டுச் சென்றது.