2014 ஆம் ஆண்டு பிரதமராக மோடி பதவியேற்றதிலிருந்தே எல்லைப் பகுதிகளில் உள்ள பாதுகாப்புப் படை வீரர்களுடன் அவர் தீபாவளி கொண்டாடி வருகிறார். அப்படி அவர் தீபாவளி கொண்டாடியதில் மிக முக்கியமான பகுதி லோங்கேவாலா பகுதியாகும்.
மேற்கு எல்லைப் பகுதியில் உள்ள லோங்கேவாலா ராஜாங்க ரீதியாக மிக முக்கியமான பகுதியாகும். 1971ஆம் ஆண்டு, இங்குதான் இந்திய-பாகிஸ்தான் நாடுகளுக்கிடையே போர் நடைபெற்றது.
ராஜஸ்தானில் உள்ள லோங்கேவாலாவில்தான் பாகிஸ்தான் நாட்டைச் சேர்ந்த 3 ஆயிரம் ராணுவ வீரர்களை வெறும் 120 இந்திய ராணுவ வீரர்கள் எதிர்கொண்டனர். குல்தீப் சிங் சந்த்பூரி தலைமையிலான இந்திய ராணுவப் படை மிகத் துணிவாக பாகிஸ்தான் ராணுவ வீரர்களை எதிர்கொண்டது.
பாகிஸ்தான் சார்பில் 51 காலாட்படைகளிலிருந்து 3 ஆயிரம் ராணுவ வீரர்கள் அங்கு களமிறக்கப்பட்டனர். லோங்கேவாலாவில் காலை உணவையும் ஜெய்சால்மரில் மதிய உணவையும் உண்ண பாகிஸ்தான் ராணுவ வீரர்கள் திட்டமிட்டிருந்தனர். பாகிஸ்தானியர்களின் இந்தக் காலதாமதமான திட்டத்திற்கு இந்திய ராணுவ வீரர்கள் சார்பில் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது.
இதனை வாய்ப்பாகப் பயன்படுத்திக் கொண்ட இந்திய விமானப்படை, ஜெய்சால்மரில் தாக்குதல் நடத்தினர். இதற்கு பாகிஸ்தானால் பதிலடி கொடுக்க முடியவில்லை. இதன் காரணமாக பாகிஸ்தான் அப்பகுதியிலிருந்து பின்வாங்க நேர்ந்தது. பாகிஸ்தானின் 20 டாங்கிகளையும் 100 வாகனங்களையும் இந்திய ராணுவ வீரர்கள் சேதப்படுத்தினர்.
இம்மாதிரியான வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த இடங்களில்தான் ஒவ்வொரு வருடமும் பிரதமர் மோடி தீபாவளி கொண்டாடி வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.