தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

இந்திரா காந்தி பிறந்தநாளுக்கு மோடி, ராகுல் ட்வீட்! - ராகுல் காந்தி ட்வீட்

முன்னாள் பிரதமர் இந்திரா காந்தியின் பிறந்த நாளான இன்று, அதை நினைவு கூர்ந்து பிரதமர் நரேந்திர மோடி, ராகுல் காந்தி ட்வீட் செய்துள்ளனர்.

Indira Gandhi

By

Published : Nov 19, 2019, 10:40 AM IST

சுதந்திர இந்தியாவின் மூன்றாவது பிரதமராகத் தேர்ந்தெடுக்கப்பட்டவர் இரும்புப் பெண் என்று அழைக்கப்பட்ட இந்திரா காந்தி. இந்தியாவின் முதல் மற்றும் ஒரே பெண் பிரதமராக இருந்தவர். ஜவஹர்லால் நேருவுக்குப் பின் அதிக நாட்கள் பிரதமராக இருந்தவர் என்ற பல சாதனைக்குச் சொந்தக்காரரான, இவரது 102ஆவது பிறந்த நாள் இன்று கொண்டாடப்படுகிறது.

இந்திரா காந்தியின் பிறந்த நாளுக்குப் பிரதமர் நரேந்திர மோடி வாழ்த்து தெரிவித்து, தனது ட்விட்டர் பக்கத்தில் முன்னாள் பிரதமர் இந்திரா காந்திக்கு அவரது பிறந்த நாளான இன்று அஞ்சலி செலுத்தும் விதமாக ட்வீட் செய்துள்ளார்.

இதேபோல காங்கிரஸ் முக்கியத் தலைவரும் வயநாடு நாடாளுமன்ற உறுப்பினருமான ராகுல் காந்தி, "இந்தியாவைக் கட்டமைப்பதில் முக்கிய பங்காற்றிய அற்புதமான தலைமைப் பண்புடைய இரும்புப் பெண்ணும்; எனது பாட்டியுமான இந்திரா காந்தியை இன்று நினைவு கூர்கிறேன்" என்று ட்வீட் செய்துள்ளார்.

இதையும் படிங்க:இந்திரா காந்தியின் 102ஆவது பிறந்தநாள்: சோனியா, மன்மோகன்சிங் மலர்த்தூவி மரியாதை

ABOUT THE AUTHOR

...view details