கரோனா வைரஸ் பரவலை தடுப்பதற்காக நாடு முழுவதும் மே மூன்றாம் தேதிவரை ஊரடங்கு உத்தரவு நீட்டிக்கப்பட்டுள்ளது. மக்கள் அனைவரும் வீட்டிலேயே இருக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர். இத்தகைய நேரத்திலும் சுகாதாரப் பணியாளர்கள், தூய்மைப் பணியாளர்கள், காவலர்கள், மருத்துவர்கள் ஆகியோர் அயராது உழைத்துவருகின்றனர்.
இவர்களை கௌரவிக்கும் வகையில், பிரதமர் மோடி சில நாள்களுக்கு முன்பு மக்கள் அனைவரும் கைகளை தட்ட அழைப்பு விடுத்திருந்தார். அதேபோல், மக்களும் ஆர்வமாக கைகளை தட்டி அதை அனைத்து அரசு ஊழியர்களுக்கும் சமர்ப்பித்தனர்.
மணல் கலைஞரின் கிரியேட்டிவை பாராட்டிய பிரதமர் மோடி இந்நிலையில், ஒடிசா மாநிலத்தைச் சேர்ந்த சர்வதேச மணல் சிற்பக் கலைஞர் சுதர்சன் பட்நாயக், தனது கிரியேட்டிவிட்டி மூலம் பிரதமரின் வார்த்தையை மணல் ஒவியத்தில் கொண்டு வந்துள்ளார். இந்த மணல் ஓவியத்தை பார்த்த மக்கள் பலரும் பாராட்டி வருகின்றனர்.
தற்போது, இவரின் செயலை பாராட்டி பிரதமர் மோடி ட்வீட் செய்திருப்பது பலரையும் வியப்பில் ஆழ்த்தியுள்ளது. அதுமட்டுமின்றி, மத்திய அமைச்சர்கள் தர்மேந்திர பிரதான், கஜேந்திர சிங் ஷெகாவத் ஆகியோரும் சுதர்சனின் கிரியேட்டிவிட்டியை பாராட்டி நன்றி தெரிவித்தனர்.
இதையும் படிங்க:ஹேண்ட் வாஷ் செய்ய உங்களுக்கு நினைவூட்ட வேண்டுமா! - அப்போ இந்த வாட்ச கட்டிக்கோங்க!