ஜம்மு - காஷ்மீர் மாநிலத்திற்கு கொடுக்கப்பட்டிருந்த சிறப்பு சட்டப்பிரிவான 370, மத்திய அரசால் நீக்கப்பட்டது. இதனால் அம்மாநிலத்தில் அசாதாரமாண சூழல் நிலவியது. அசம்பாவிதங்களைத் தடுக்கும் விதமாக காஷ்மீரின் முக்கிய தலைவர்கள் வீட்டு சிறையில் வைக்கப்பட்டனர். அதேபோல், பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பெரும் பாதிப்புக்கு உள்ளானது.
சிறப்பு அங்கீகாரம் நீக்கத்திற்கு பின் பிரதமருடன் ஜம்மு ஆளுநர் சந்திப்பு! - Jammu - Kashmir
டெல்லி: ஜம்மு - காஷ்மீர் மாநிலத்திற்கு கொடுக்கப்பட்டிருந்த சிறப்பு சட்டப்பிரிவு நீக்கப்பட்டதையடுத்து, முதன்முறையாக அம்மாநில ஆளுநர் சத்யபால் மாலிக் பிரதமர் மோடியை சந்தித்துள்ளார்.
சத்யபால் மாலிக்
இந்நிலையில், ஜம்மு - காஷ்மீர் மாநிலம் இரு யூனியன் பிரதேசங்களாக பிரிக்கப்பட்டு 42 நாட்களாகியுள்ள நிலையில், அம்மாநில ஆளுநர் சத்யபால் மாலிக் முதன்முறையாக பிரதமர் மோடியை சந்தித்துள்ளார். இந்த சந்திப்பின்போது, ஜம்மு - காஷ்மீரில் மேற்கொள்ளப்பட வேண்டிய அடுத்தக்கட்ட நடவடிக்கைகள் குறித்து ஆலோசனைகள் மேற்கொள்ளப்பட்டதாகத் தெரிகிறது.