பிரதமர் நரேந்திர மோடி, சீன அதிபர் ஜி ஜின்பிங் ஆகியோர் மாமல்லபுரத்தில் கடந்த இரண்டு நாட்கள் சந்தித்துப் பேசினர். இந்த சந்திப்பிற்காக மாமல்லபுரத்தில் தங்கியிருந்த பிரதமர் நரேந்திர மோடி நேற்று காலை மாமல்லபுரம் கடற்கரையிலுள்ள குப்பைகளைச் சேகரித்தார்.
அவர் குப்பைகளைச் சேகரிக்கும்போது எடுக்கப்பட்ட பல புகைப்படங்களும் இணைதயளத்தில் வெளியிடப்பட்டன. அதில் பல புகைப்படங்களில் மோடி தனது கையில் ஒரு பொருளை வைத்திருந்தார். அது என்ன பொருள் என்று தெரியாமல் நெட்டிசன்கள் பலரும் பல கருத்துகளைப் பதிவிட்டு வந்தனர்.