லடாக் எல்லைப் பகுதியில் இந்திய - சீன ராணுவத்தினர் இடையே கடந்த ஒரு மாதத்துக்கும் மேலாக மோதல் போக்கு நிலவி வந்த நிலையில், எல்லைப் பகுதியில் இரு தரப்பினரும் தத்தமது படைகளைக் குவித்தனர்.
இதற்கு சுமுக தீர்வு காணும் நோக்கில் உயர்மட்ட அளவில் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு வந்த சூழலில், கடந்த திங்கள்கிழமை (ஜூன் 15) அன்று சர்ச்சைக்குரிய கல்வான் பள்ளத்தாக்கில் இரு தரப்பினருக்கும் இடையே திடீரென மோதல் வெடித்தது.
சுமார் ஏழு மணி நேரம் நீடித்த இந்த மோதலில் 20 இந்திய வீரர்கள் வீரமரணம் அடைந்தனர். இந்தச் சம்பவம் நாட்டு மக்களிடையே பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது.