இந்தியாவில் உருவான புல்புல் புயலானது சனிக்கிழமை (நவம்பர் 9) இரவு 8.30 - 11.30 மணியளவில் சுந்தர்பன் வனப்பகுதிக்கு அருகிலுள்ள மேற்கு வங்க கடற்கரை அருகே கரையைக் கடந்தது. அதீவிர புயலாக இருந்த புல்புல் தீவிர புயலாக மாறியபோதும் அடுத்த 12 மணி நேரத்துக்கு மேற்கு வங்க - வங்கதேச கடற்கரை மாவட்டங்களில் கடும் மழைப்பொழிவுக்கு வாய்ப்புள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இந்நிலையில் பிரதமர் நரேந்திர மோடி, கிழக்கு இந்தியாவில் பெய்துவரும் கனமழை குறித்தும் புயல் குறித்து ஆய்வு செய்ததாகவும் இதுகுறித்து மேற்கு வங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜியுடன் ஆலோசனை நடத்தியதாகவும் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். மேலும், இதில் மத்திய அரசு இயன்ற உதவிகளைச் செய்யும் என்றும் உறுதியளித்தார்.