17ஆவது மக்களவைத் தேர்தலில் 303 தொகுதிகளில் வெற்றி பெற்று தனிப்பெரும்பான்மையுடன் பாஜக மீண்டும் ஆட்சி அமைத்துள்ளது. நாட்டின் பிரதமராக நரேந்திர மோடி மீண்டும் பதவியேற்றுள்ளார்.
மோடி பதவியேற்பு விழாவை கொண்டாடும் பாஜக தொண்டர்கள்!
டெல்லி: நாட்டின் பிரதமராக மோடி இரண்டாவது முறையாக பதவி ஏற்றிருப்பதை பாஜக தொண்டர்கள் பட்டாசுகள் வெடித்து கொண்டாடி வருகின்றனர்.
பாஜக
மோடி பதவியேற்பு விழாவை கொண்டாடும் பாஜக தொண்டர்கள்!
இவரின் பதவியேற்பு விழா குடியரசுத் தலைவர் மாளிகையில் உலகத் தலைவர்களின் முன்னிலையில் இன்று பிரமாண்டமாக நடைபெற்றது.
இந்த நிலையில், நாட்டின் பிரதமராக மீண்டும் மோடி பதவியேற்றிருப்பதை கொண்டாடும் விதமாக இந்தியா முழுவதும் உள்ள பாஜக தொண்டர்கள் பட்டாசுகள் வெடித்தும், இனிப்புகள் வழங்கியும் கொண்டாடி வருகின்றனர்.