ஜிஎஸ்டி கவுன்சிலின் 37ஆவது மாநாடு இன்று தொடங்குவதற்கு முன் செய்தியாளர்களைச் சந்தித்த மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், பொருளாதாரத்தை மேம்படுத்தவும் தொழில்துறை முதலீடுகளை ஈர்க்கவும் பெருநிறுவனங்களுக்கு பல்வேறு சலுகைகளை வெளியிட்டார்.
இந்நிலையில் பிரதமர் நரேந்திர மோடி தனது ட்விட்டர் பக்கத்தில் நிர்மலா சீதாராமனின் புகைப்படத்தைப் பதிவிட்டு, "பெரு நிறுவனங்களுக்கான வரி குறைப்பு என்பது வரலாற்றுச் சிறப்புமிக்க ஒன்று. இது #MakeInIndia திட்டத்தின் கீழ் தனியார் முதலீடுகளை ஈர்க்க உதவும். இதன்மூலம் அதிக வேலைவாய்ப்புகள் உருவாக்கப்பட்டு 130 கோடி இந்தியர்கள் பயனடைவார்கள்" என்று ட்வீட் செய்துள்ளார்.