புதுச்சேரியில் அகில இந்திய என்ஆர் காங்கிரஸ் கட்சியின் பத்தாம் ஆண்டுத் தொடக்க விழா, ரெட்டியார்பாளையத்தில் உள்ள அக்கட்சியின் அலுவலகத்தில் இன்று நடைபெற்றது. அதில் கலந்துகொண்ட என்ஆர் காங்கிரஸ் தலைவர் ரங்கசாமி விழாவை கொடியேற்றித் தொடங்கி வைத்தார்.
'வளர்ச்சியில் கவனம் செலுத்தாமல் அகில இந்திய அரசியலை பேசுகிறார் நாராயணசாமி' - ரங்கசாமி சாடல் - புதுச்சேரி மாநிலச் செய்திகள்
புதுச்சேரி: வளர்ச்சியில் கவனம் செலுத்தாமல் அகில இந்திய அரசியலை பேசி வருகிறார் முதலமைச்சர் நாராயணசாமி என எதிர்க்கட்சித் தலைவரும் என்ஆர் காங்கிரஸ் தலைவருமான ரங்கசாமி குற்றம்சாட்டியுள்ளார்.
பின்னர் பேசிய அவர், புதுச்சேரியில் எந்தவித வளர்ச்சித் திட்டத்தையும் ஆளும் திமுக, காங்கிரஸ் கூட்டணி செய்யவில்லை எனவும்; புதுச்சேரியின் வளர்ச்சியில் கவனம் செலுத்தாமல் அகில இந்திய அரசியலை பேசிவரும் முதலமைச்சர் நாராயணசாமி, புதுச்சேரியை வீணாக்கி விட்டார் எனவும் குற்றம்சாட்டினார்.
மேலும் அவர், 'புதுச்சேரியில் கேசினோ சூதாட்ட கிளப் தொடங்கி, அதன் மூலம் வருமானத்தைப் பெருக்க திட்டமிட்டிருப்பது கண்டனத்துக்குரியது. தனிநபர் ஒருவரின் லாபத்தைப் பெருக்கும் நோக்கில், இத்திட்டத்தை செயல்படுத்த முயற்சி நடைபெற்று வருகிறது. மேலும் அரசு நிறுவனங்கள் மூடும் நிலைக்குத் தள்ளப்பட்டு வருகிறது. இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு இன்றி தவிக்கின்றனர்' எனக் கூறினார்.
தொடர்ந்து பேசிய ரங்கசாமி, '2021ஆம் ஆண்டு புதுச்சேரியில் என்ஆர் காங்கிரஸ் ஆட்சி அமைக்கும்' என்றும் நம்பிக்கை தெரிவித்தார்.