புதுச்சேரியில் உள்ள தனது இல்லத்தில் செய்தியாளர்களை சந்தித்த முதலமைச்சர் நாராயணசாமி, "பல்வேறு மாநிலங்களில் தனது அதிகாரத்தை பயன்படுத்தி, ஜனநாயகத்தை தங்களின் காலில் போட்டு பாஜக மிதித்துள்ளது. ஆனால், பாஜகவின் முயற்சி மகாராஷ்டிராவில் தோல்வியடைந்திருக்கிறது.
இந்த விவகாரத்தில் ஜனநாயகத்தை காப்பாற்றிய உச்ச நீதிமன்றத்திற்கு நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன். உச்ச நீதிமன்ற உத்தரவை மீறி மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசுக்கு ஆளுநர் கிரண்பேடி தொல்லை கொடுத்துவருகிறார். அரசு அலுவலர்களை காவலர்களை போல் நடத்தியும் அவர்களை மிரட்டியும் அராஜகத்தில் ஈடுபட்டு வருகிறார். இது தொடர்பான வழக்கில் டிசம்பர் 11ஆம் தேதி உயர் நீதிமன்றத்தில் நல்ல முடிவு கிடைக்கும். இருப்பினும் உயர் நீதிமன்ற உத்தரவை மீறி செயல்பட்டு வரும் கிரண்பேடி மீது நானே நேரடியாக நீதிமன்ற அவமதிப்பு வழக்கை தொடருவேன்" என்றார்.