புதுச்சேரி முதலமைச்சர் நாராயணசாமி சட்டப்பேரவை வளாகத்தில் இன்று செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர், "கத்திரி வெயில் முடிந்தாலும் கடும் வெயில் நீடிக்கிறது. எனவே பெற்றோர்கள், மாணவர்கள் கேட்டுக் கொண்டதன் பேரில் புதுச்சேரி மற்றும் காரைக்காலில் பள்ளிகளுக்கு கோடை விடுமுறை நீட்டிப்பு செய்யப்படுகிறது. ஜூன் 3ஆம் தேதி தொடங்க இருந்த பள்ளிகள் ஜூன் 10ஆம் தேதி திறக்கப்படும்.
'பள்ளிகள் தாமதமாகத்தான் திறக்கப்படும்..!' - நாராயணசாமி - நாராயணசாமி
புதுச்சேரி: கடும் வெயில் காரணமாக புதுச்சேரி மற்றும் காரைக்காலில் பள்ளிகளுக்கு கோடை விடுமுறை நீட்டிக்கப்பட்டுள்ளதாக முதலமைச்சர் நாராயணசாமி தெரிவித்துள்ளார்.
narayanasamy
மத்திய அரசுடன் இணைந்து செயல்பட வேண்டும் என்பதே புதுச்சேரி அரசின் விருப்பம். புதுச்சேரிக்கு மாநில அந்தஸ்து, ஏழாவது ஊதியக்குழு நிதி, கடன் தள்ளுபடி உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்துவோம். கிரண்பேடியை மாற்றுவது குறித்து மத்திய அரசு முடிவு செய்யும்" என்றார்.