புதுச்சேரி மக்களவைத் தொகுதியில் போட்டியிடும் காங்கிரஸ் வேட்பாளர் வைத்திலிங்கத்தை ஆதரித்து முதலமைச்சர் நாராயணசாமி பழையபேருந்து நிலையம் அருகே வாக்கு சேகரித்தார். அப்போது அவர் பேசுகையில், "ராகுல் காந்தியை ஆதரிக்க காங்கிரஸ் வேட்பாளரை பாராளுமன்றத்திற்கு அனுப்ப வேண்டும். காங்கிரஸ் தேர்தல் அறிக்கையில் ஏழை மக்களுக்கு வருடத்திற்கு 72 ஆயிரம் வழங்கப்படும். 22 லட்சம் வேலைவாய்ப்பு ஏற்படுத்தி தரப்படும். ஜிஎஸ்டி வரியில் ஒரு நாடு, ஒரே வரி என்று மாற்றப்படும்" என்றார்.
'காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தால் ஒரே நாடு, ஒரே வரி என்று மாற்றுவோம்' - நாராயணசாமி - Kiran bedi
புதுச்சேரி: காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தால் ஒரே நாடு, ஒரே வரி என்று மாற்றுவோம் என்று புதுச்சேரி முதலமைச்சர் நாராயணசாமி தெரிவித்தார்.
நாராயணசாமி பரப்புரை
தொடர்ந்து, நெல்லித்தோப்பு, பெரியார் நகர், காரியம்புத்தூர் பகுதிகளில் முதலமைச்சர் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்.