புதுச்சேரி உருளையன்பேட்டை தொகுதி திமுக சார்பாக தேர்தல் செயல்வீரர்கள் கூட்டம் மற்றும் மக்களவைத் தொகுதி வேட்பாளர் அறிமுகக் கூட்டம் நடைபெற்றது. தனியார் மண்டபம் ஒன்றில் நடந்த இக்கூட்டத்திர்கு திமுக தெற்கு மாநில அமைப்பாளரும், உருளையன்பேட்டை சட்டப்பேரவை உறுப்பினருமான சிவா தலைமை தாங்கினார். மேலும் இந்த கூட்டத்தில் முதல்வர் நாராயணசாமி, மாநில காங்கிரஸ் தலைவர் நமச்சிவாயம் ஆகியோர் சிறப்பு விருந்தினரகளாக கலந்துகொண்டு பேசினார்.
அதிமுகவினர் ஜெயலலிதாவுக்கு துரோகம் செய்துவிட்டனர்: நாராயணசாமி - ஜெயலலிதா
புதுச்சேரி: அதிமுக தலைவர்கள் ஜெயலலிதாவுக்கு துரோகம் இழைத்துள்ளனர் என அம்மாநில முதல்வர் என நாராயணசாமி தெரிவித்துள்ளார்.
நாராயணசாமி
இக்கூட்டத்தில் பேசிய முதல்வர் நாராயணசாமி, “ஜெயலலிதா துரோகி என்று சொன்ன ரங்கசாமியுடன் அதிமுக கூட்டணி அமைத்துள்ளது. புதுச்சேரியில் உள்ள அதிமுக தலைவர்கள் ஜெயலலிதாவுக்கு துரோகம் இழைத்துள்ளனர்” என்றார்.