தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

ஐஎஸ்ஐ அமைப்பை ஊக்குவிக்கும் நாடுகளை ஐ.நா கண்டிக்க வேண்டும் -நாராயணசாமி - இலங்கை குண்டு வெடிப்பு

புதுச்சேரி: இலங்கை தாக்குதலுக்கு பொறுப்பேற்றுள்ள ஐஎஸ்ஐ அமைப்பை ஊக்குவிக்கக்கூடிய நாடுகளை ஐ.நா. சபை கண்டிக்க வேண்டும் என புதுச்சேரி முதலமைச்சர் நாராயணசாமி வலியுறுத்தியுள்ளார்.

ஐஎஸ்ஐ அமைப்பை ஊக்குவிக்கும் நாடுகளை ஐ.நா கண்டிக்க வேண்டும்- நாராயணசாமி

By

Published : Apr 24, 2019, 10:07 AM IST

ஈஸ்டர் பண்டிகை நாளான ஞாயிற்றுக்கிழமை இலங்கையின் பல்வேறு இடங்களில் அடுத்தடுத்து குண்டுகள் வெடித்தன. இந்தக் குண்டுவெடிப்பில் 300-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர். இந்த தாக்குதலுக்கு ஐஎஸ்ஐ அமைப்பு பொறுப்பேற்றுள்ளது.

இந்நிலையில் இலங்கை தேவாலயத்தில் வெடி குண்டு தாக்குதலில் இறந்தவர்களுக்கு புதுச்சேரி மிஷன் வீதி ஜென்மராக்கினி மாதா கோயில் மற்றும் பழைய பேருந்து நிலையம் பகுதிகளிஸ் புதுச்சேரி காங்கிரஸ் கமிட்டி சார்பில் அஞ்சலி செலுத்தப்பட்டது.

அங்கு புதுச்சேரி முதலமைச்சர் நாராயணசாமி தலைமையில் சர்வ மதத்தினர் மெழுகுவத்தி ஏந்தி அஞ்சலி செலுத்தினார்கள். பின்னர் புதுச்சேரி முதலமைச்சர் நாராயணசாமி செய்தியாளர்களை சந்தித்துப் பேசினார்.

அப்போது, "இலங்கையில் நடைபெற்ற தேவாலய தாக்குதலுக்குக் கண்டனம் தெரிவித்துக் கொள்கிறேன். இந்த தாக்குதலுக்குப் பொறுப்பேற்றுள்ள ஐஎஸ்ஐ அமைப்பை தடை செய்ய வேண்டும். இந்த அமைப்பை ஊக்குவிக்கக் கூடிய நாடுகளை ஐ.நா. சபை கண்டிக்க வேண்டும்" என்று வலியுறுத்தினார்.

ABOUT THE AUTHOR

...view details