தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

குடியுரிமை திருத்தச் சட்டத்தை அமல்படுத்த மாட்டேன் - நாராயணசாமி - puducherry

புதுச்சேரி: ஆட்சியே போனாலும் சரி குடியுரிமை திருத்தச் சட்டத்தை புதுச்சேரியில் அமல்படுத்த மாட்டேன் என இஸ்லாமியர்கள் பங்கேற்ற ஆர்ப்பாட்டத்தில் முதலமைச்சர் நாராயணசாமி பேசினார்.

நாராயணசாமி
நாராயணசாமி

By

Published : Dec 21, 2019, 5:19 PM IST

குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து புதுச்சேரியில் உள்ள இஸ்லாமிய அமைப்புகள் சார்பில் சுதேசி பஞ்சாலை அருகே கண்டன பொதுக்கூட்டம் நடைபெற்றது. இதில் அம்மாநில முதலமைச்சர் நாராயணசாமி, சட்டப்பேரவை உறுப்பினர் ஜான்குமார், சிவா உள்ளிட்ட ஆயிரத்திற்கும் மேற்பட்ட இஸ்லாமியர்கள் கலந்துகொண்டு மத்திய அரசு கொண்டுவந்துள்ள குடியுரிமை திருத்தச் சட்டத்தை மத்திய அரசு திரும்பப்பெற வேண்டும், விலைவாசி உயர்வை கட்டுப்படுத்தக்கோரி கோஷங்களை எழுப்பினர்.

நாராயணசாமி உரை

முன்னதாக கண்டன பொதுக்கூட்டத்தில் இஸ்லாமியர்கள் மத்தியில் பேசிய நாராயணசாமி, “புதுச்சேரியில் காங்கிரஸ் அரசை கவிழ்த்தாலும் சரி மத்திய அரசு கொண்டுவந்த குடியுரிமை திருத்தச் சட்டத்தை அமல்படுத்தவிட மாட்டோம். தமிழ்நாட்டில் சிறுபான்மை இன மக்களை பழிவாங்க வேண்டும் என்பதற்காகவே அதிமுக அரசு செயல்படுகிறது. குடியுரிமை திருத்தச் சட்டத்தை திரும்பப் பெறும்வரை போராட்டம் தொடரும்” என்றார்.

ABOUT THE AUTHOR

...view details