பிரபல பாடகர் எஸ்.பி. பாலசுப்பிரமணியத்திற்கு கடந்த 5ஆம் தேதி கரோனா வைரஸ் (தீநுண்மி) தொற்று இருப்பது உறுதிசெய்யப்பட்டது. இதையடுத்து அவர் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சைப் பெற்றுவருகிறார். இதனிடையே எஸ்.பி.பி.யின் உடல்நிலை சீராக உள்ளதாக அவரது மகன் எஸ்.பி. சரண் நேற்று (ஆக.17) தெரிவித்தார்.
எஸ்.பி.பி. விரைவில் குணமடைந்து திரும்ப வர வேண்டும் என்று திரையுலகப் பிரபலங்கள், அரசியல் கட்சியினர் எனப் பலரும் தொடர்ந்து பிரார்த்திப்பதாகத் தெரிவித்துவருகின்றனர்.
அந்தவகையில், மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்றுவரும் எஸ்.பி. பாலசுப்பிரமணியம், விரைவில் குணமடைய பிரார்த்திப்பதாகப் புதுச்சேரி முதலமைச்சர் நாராயணசாமி ட்விட்டரில் தெரிவித்துள்ளார்.
அதில், “கரோனா தீநுண்மி தொற்றால் பாதிக்கப்பட்டு தனியார் மருத்துவமனையில் மருத்துவம் பெற்றுவரும் பாடகர் எஸ்.பி.பி. விரைவில் குணமடைய வேண்டும் என கோடிக்கணக்கான ரசிகர்களுடன் இணைந்து நானும் பிரார்த்திக்கிறேன்” எனக் குறிப்பிட்டுள்ளார்.
இதையும் படிங்க...ஸ்டெர்லைட் ஆலைக்கான தடை தொடரும்-உயர் நீதிமன்றம்