மகாராஷ்டிரா மாநில சட்டப்பேரவையின் சபாநாயகராக காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த நானா படோலே தேர்வு செய்யப்பட்டுள்ளார். அம்மாநிலத்தில் சிவசேனா தலைமையிலான மகாவிகாஸ் அகாதி கூட்டணி நானா படோலேவை அவைத் தலைவராக தேர்வு செய்துள்ளது.
மகாராஷ்டிரத்தில் பாஜகவை தனிமைப்படுத்தும் நோக்கில் சிவசேனா - தேசியவாத காங்கிரஸ் - காங்கிரஸ் கட்சிகள் இணைந்து மகாவிகாஸ் அகாதி என்ற பெயரில் கூட்டணி ஆட்சி அமைத்துள்ளது. இந்த கூட்டணியின் நம்பிக்கை வாக்கெடுப்பு நேற்று நடைபெற்ற நிலையில் இடைக்கால சபாநாயகர் தேர்வு தொடர்பாக அமளியில் ஈடுபட்டு பாஜக வாக்கெடுப்பில் பங்கேற்கவில்லை. இதைத்தொடர்ந்து 169 எம்எல்ஏக்களின் ஆதரவோடு மகா அகாதி கூட்டணி நம்பிக்கை வாக்கெடுப்பில் வெற்றி பெற்றது.