தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

இளங்கலை படிப்புக்கான தகுதி பட்டியலில் தோனியின் பெயர் - இளங்கலை படிப்புக்கான தகுதி பட்டியலில் தோனியின் பெயர்

கொல்கத்தா: இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் மகேந்திர சிங் தோனியின் பெயர் மேற்கு வங்கத்தில் உள்ள கல்லூரியில் இளங்கலை படிப்புக்கான தகுதி பட்டியலில் இடம் பெற்றுள்ளது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

name-of-ms-dhoni-appears-in-kandi-raj-college-merit-list
name-of-ms-dhoni-appears-in-kandi-raj-college-merit-list

By

Published : Oct 3, 2020, 7:23 PM IST

இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் மகேந்திர சிங் தோனியின் பெயர் மேற்கு வங்கத்தில் உள்ள கல்லூரியில் இளங்கலை படிப்புக்கான தகுதி பட்டியலில் இடம் பெற்றுள்ளது சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது. மேலும் தோனியின் பெயர் ஓபிசி ஒதுக்கீட்டில் பதிவு செய்யப்பட்டுள்ளதாக கல்லூரி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

இதுகுறித்து, கல்லூரியின் முதல்வர் டெபாஷிஸ் சஹா கூறுகையில், "சேர்க்கை நேரத்தில் உண்மையான தகவல்கள் வெளிவரும். இதுகுறித்து விசாரிக்கப்படும்" என்றார். முன்னதாக, பாலிவுட் நடிகை சன்னி லியோனின் பெயர் கொல்கத்தா கல்லூரியில் தகுதி பட்டியலில் பல முறை இடம்பெற்றது.

பராசத் அரசு கல்லூரியில் ஆங்கில பட்டப்படிப்பில் சிறந்த மதிப்பெண் பெற்றவர்களின் பட்டியலில் நடிகையின் பெயர் மூன்றாவது இடத்தில் இடம்பெற்றது. இதற்கு முன்னதாக அமெரிக்க ஆபாச பட நடிகை டானி டேனியல்ஸ், லெபனானில் இருந்து வெப்கேம் மாடல், மியா கலீஃபா ஆகியோரின் பெயரும் இருந்தன.

தகுதி பட்டியலில் தோனியின் பெயர்

ஆகஸ்ட் 28 அன்று மேற்கு வங்கத்தின் மால்டா மாவட்டத்தில் உள்ள ஒரு கல்லூரியின் தகுதி பட்டியலில் பாலிவுட் பாடகி நேஹா கக்கரின் பெயரும் முதலிடத்தில் உள்ளது. இதுகுறித்து விளக்மளித்த மால்டா மாவட்டத்தில் உள்ள மணிக்சக் கல்லூரி அலுவலர்கள், முதல் தகுதி பட்டியல் வெளியிடப்பட்ட பின்னர் பின்னணி பாடகரின் பெயரை கண்டறிந்ததாகவும், அதன் பின்பு புதிய பட்டியல் வெளியிடப்பட்டதாகவும் தெரிவித்தனர்.

இதையும் படிங்க: 'யாராலும் தடுக்க முடியாது' - சூளுரையுடன் மீண்டும் ஹத்ராஸ் செல்லும் ராகுல்

ABOUT THE AUTHOR

...view details