சுட்டுக்கொலை:இந்திய விமானப் படையில் படைத்தலைவராக சேவை புரிந்து வந்தவர் ரவி கண்ணா. இவர் ஜனவரி மாதம் 25ஆம் தேதி 1990ஆம் ஆண்டு ஜம்மு காஷ்மீர் விடுதலை முன்னணி (ஜே.கே.எல்.எப்) என்ற இயக்கத்தினாரால் சுட்டுக் கொல்லப்பட்டார்.
இந்த பயங்கரவாத தாக்குதலில் 4 இந்திய வீரர்கள் தங்களது இன்னுயிரை நாட்டுக்காகத் தியாகம் செய்தனர். இந்த பயங்கரவாத தாக்குதலுக்கு, பயங்கரவாதியாக இருந்து பிரிவினைவாதியாக மாறிய யாசின் மாலிக் பின்னணியில் இருந்தது தெரியவந்தது.
யாசின் மாலிக் கைது:இதையடுத்து தேசிய புலனாய்வு முகமை (என்ஐஏ) போலீசார் யாசின் மாலிக்கை கைது செய்தனர். பின்னர் அவர் திகார் சிறையில் அடைக்கப்பட்டார். சிறையில் இருந்தபடியே யாசின் மாலிக்கிடம் விசாரணை நடத்தப்பட்டது. தனது தரப்பு சாட்சியங்கள் மற்றும் விளக்கங்களை யாசின் மாலிக் நேரடி வீடியோ மூலம் அளித்தார். சிறப்பு நீதிமன்ற நீதிபதியும், அவரிடம் வீடியோ காட்சி மூலமாகவே விசாரித்தார். இதற்கிடையில் ரவி கண்ணாவின் மரணத்துக்கு நீதி வேண்டும் என்று அவரின் மனைவி நிர்மல் தொடர்ந்து சட்ட ரீதியாகப் போராடிவந்தார்.