தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

இந்தியா வந்தடைந்தார் ட்ரம்ப்; பாரம்பரிய நடனத்துடன் உற்சாக வரவேற்பு - US President Trump latest news

டெல்லி: அமெரிக்க அதிபர் ட்ரம்ப் தனி விமானம் மூலம் இந்தியா வந்தடைந்தார். அகமதாபாத் விமான நிலையத்தில் அவருக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.

Trump arrives in Ahmedabad
Trump arrives in Ahmedabad

By

Published : Feb 24, 2020, 12:08 PM IST

Updated : Feb 24, 2020, 12:22 PM IST

அமெரிக்க அதிபர் ட்ரம்ப் இரு நாள் அரசு முறை பயணமாக இன்று இந்தியா வருகிறார். அகமதாபாத்திலுள்ள உலகில் மிகப் பெரிய கிரிக்கெட் மைதனமான மொடீரா மைதனத்தை திறந்துவைக்கவுள்ள ட்ரம்ப், அதைத்தொடர்ந்து தாஜ் மஹாலை சுற்றிப் பார்க்கவுள்ளார்.

தற்போது அமெரிக்க அதிபர் ட்ரம்ப், அவரது மனைவி மெலனியா ட்ரம்புடன் தற்போது இந்தியா வந்தடைந்தார். அவர்கள் பயணித்த ஏர் ஃபோர்ஸ் ஒன் தனி விமானம், தற்போது அகமதாபாத் விமான நிலையத்தியத்தில் தரையிறங்கியுள்ளது.

அமெரிக்க அதிபர் ட்ரம்பை பிரதமர் நரேந்திர மோடி நேரில் சென்று வரவேற்றார். இந்தியாவின் பாரம்பரிய நடன கலைஞர்கள் சார்பில் அவருக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. அப்போது குஜராத் முதலமைச்சர் விஜய் ரூபானி, ட்ரம்ப்பின் மகள் இவான்கா ட்ரம்ப் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.

இதையும் படிங்க: உலகில் மிகப் பெரிய கிரிக்கெட் மைதானமான மொடீராவின் சிறப்புகள்!

Last Updated : Feb 24, 2020, 12:22 PM IST

ABOUT THE AUTHOR

...view details