ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினத்தில் பரவடா பகுதியில் ஜவஹர்லால் நேரு பார்மா சிட்டி அமைந்துள்ளது. இங்கு சைனர் பார்மா என்ற நிறுவனம் செயல்பட்டுவருகிறது. இந்த நிறுவனத்தில் நேற்று விஷவாயுக் கசிவு ஏற்பட்டது. இதில் ஊழியர்கள் இருவர் பரிதாபமாக உயிரிழந்தனர். இச்சம்பவம் தொடர்பாக கவலை தெரிவித்த சந்திரபாபு நாயுடு, தனது ட்விட்டர் பக்கத்தில் ஆந்திர அரசை விமர்சித்திருந்தார்.
அவர் பதிவிட்டிருந்த ட்வீட்டில், ”அரசாங்கத்தின் நடவடிக்கை துரிதமாக இல்லாததால் எரிவாயுக் கசிவு நிகழ்வது ஆந்திராவில் வழக்கமான ஒன்றாக மாறிவருகிறது. உயரிழந்தவர்கள் குடும்பத்தினருக்கு ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக்கொள்கிறேன். தவறு செய்யும் நிறுவனங்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டிய நேரம் இது.