மகாராஷ்டிரா மாநிலம் நாக்பூரில் ஆதர்ஷ் வித்யாலயாவில் பணியாற்றும் பேராசிரியர் நிகில் மங்கர், கோயில்களில் கரோனா பரவலை தடுப்பதற்காக டச் ஃப்ரீ பெல் ஒன்றை கண்டுபிடித்துள்ளார்.
கரோனா பரவலைத் தடுக்க கோயில்களில் ’டச் ஃப்ரீ பெல்’ அறிமுகம்!! - மகாராஷ்டிராவில் டச் ஃப்ரீ பேல் அறிமுகம்
மும்பை: கோயில்களில் கரோனா பரவலை தடுப்பதற்காக டச் ஃப்ரீ பெல்லை நாக்பூர் பேராசிரியர் அறிமுகம் செய்துள்ளார்.
இந்த புதிய பெல்லை ஜஸ்ட் 250 ரூபாய் செலவில் வடிவமைத்து அசத்தியுள்ளார். இது இருப்பதால் பக்தர்களும் அச்சமின்றி கோயில்களுக்கு வருகை தந்து பிரார்த்தனை செய்துவிட்டு இதை பயன்படுத்துகின்றனர். முன்னதாக, இரண்டு மாதங்களுக்கு முன்பு 150 ரூபாய் செலவில் கை சுத்திகரிப்பு இயந்திரம் ஒன்றையும் இவர் வடிவமைத்திருந்தார்.
இதுகுறித்து அவர் கூறுகையில், " ஐஆர் ரிமோட் கண்ட்ரோல் சர்க்யூட்டை ஆராயும்போது, கரோனா காலகட்டத்தில் இந்த சென்சார் தொழில்நுட்பத்தை நிஜ வாழ்க்கையில் பயன்படுத்தலாம் என்று நினைத்தேன். தற்போது, அதை வெற்றிகரமாக செய்து முடித்துள்ளேன்" எனத் தெரிவித்தார்.