ஆந்திர மாநிலம் சித்தூர் அருகே உள்ள நகரி சட்டப்பேரவைத் தொகுதிக்கு உட்பட்ட வட மாலை பகுதியைச் சேர்ந்த ஒருவருக்கு கரோனா அறிகுறி தென்பட்டது. இதனை அறிந்த அப்பகுதி சட்டமன்ற உறுப்பினர் ரோஜா அங்கு சென்றார்.
கரோனா முன்னெச்சரிக்கை: வீடுகளுக்கு கிருமி நாசினி தெளித்த ரோஜா - ரோஜா
சித்தூர்: நகரி சட்டமன்ற உறுப்பினர் ரோஜா தனது தொகுதியில் உள்ள வீடுகளுக்கு கிருமி நாசினி தெளித்தார்.
Roja
இதற்கிடையில் நகராட்சியின் சார்பாக அப்பகுதியில் கிருமி நாசினி தெளிக்க முடிவு செய்யப்பட்டது. கிருமி நாசினி தெளிக்க தயக்கம் காட்டிய பணியாளர்களை ஊக்கப்படுத்தும் விதமாக அதற்கான உடை அணிந்து ரோஜா கிருமி நாசினி தெளிக்கும் பணியை ஆரம்பித்தார்.
இதன் பின் நகராட்சி பணியாளர்கள் ரோஜாவுடன் சேர்ந்து அப்பகுதியில் உள்ள வீடுகள், தெருக்கள் முழுவதும் கிருமி நாசினியை தெளித்தனர்.