தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

ஜன. 9இல் மேற்கு வங்கம் செல்லும் பாஜக தேசியத் தலைவர் ஜெ.பி. நட்டா! - மேற்கு வங்க சட்டப் பேரவைத் தேர்தல்

மேற்கு வங்க மாநில சட்டப்பேரவைத் தேர்தலையொட்டி, அம்மாநிலத்தில் நடைபெறும் பாஜக பேரணியில் பங்கேற்பதற்காக, அக்கட்சியின் தேசியத் தலைவர் ஜெ.பி. நட்டா வரும் 9ஆம் தேதி மேற்குவங்கம் செல்லவுள்ளார்.

பாஜக தேசியத் தலைவர் ஜே.பி.நட்டா
பாஜக தேசியத் தலைவர் ஜே.பி.நட்டா

By

Published : Jan 2, 2021, 5:04 PM IST

டெல்லி:மேற்கு வங்க மாநில சட்டப்பேரவைத் தேர்தல் விரைவில் நடைபெறவுள்ள நிலையில், பாஜக, திரிணாமுல் காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகள் தீவிரப் பரப்புரையில் ஈடுபட்டுள்ளன.

இந்நிலையில், வரும் 9ஆம் தேதி நடைபெறும் பாஜக பேரணியில் பங்கேற்பதற்காக, அக்கட்சியின் தேசியத் தலைவர் ஜெ.பி. நட்டா அம்மாநிலத்திற்குச் செல்லவுள்ளார். இந்தப் பயணத்தின்போது அம்மாநில பாஜக மூத்தத் தலைவர்களையும் அவர் சந்தித்துப் பேசவுள்ளார்.

இதற்கு முன்பாக, பாஜக, ஆர்எஸ்எஸ் சார்பில் குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் வரும் 5ஆம் தேதி முதல் 7ஆம் தேதி வரை நடைபெறும் கூட்டத்தில் அவர் பங்கேற்கவுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.

இதையும் படிங்க:'உலகத் தலைவர்களில் பிரதமர் மோடி முதலிடம்' - ஜெ.பி. நட்டா

ABOUT THE AUTHOR

...view details