தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

காந்தி குடும்பத்தைச் சீண்டிய பாஜக தேசியத் தலைவர்! - பிரதமர் நிவாரண நிதி

டெல்லி: பல நூற்றாண்டுகளாக பிரதமர் நிவாரண நிதியை, தங்களது சொந்த பணமாக காந்தி குடும்பம் நினைத்து வந்தது என ராகுல் காந்திக்கு பாஜக தேசியத் தலைவர் ஜே.பி. நட்டா பதிலளித்துள்ளார்.

காந்தி குடும்பத்தை சீண்டிய பாஜக தேசிய தலைவர்!
காந்தி குடும்பத்தை சீண்டிய பாஜக தேசிய தலைவர்!

By

Published : Aug 18, 2020, 4:46 PM IST

பிரதமர் நிவாரண நிதி (பிஎம் கேர்) எனப்படும் கரோனா நிவாரணப்பணிகளுக்கான பிரதமர் நிதியில் நேர்மையற்ற தன்மை உள்ளது என்று செய்தி ஒன்றை மேற்கோள்காட்டி காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி சமூக வலைதளத்தில் கருத்து வெளியிட்டிருந்தார்.

இதற்குப் பதிலளித்துள்ள பாஜக தேசியத் தலைவர் ஜே.பி. நட்டா, 'பிரதமர் நிவாரண நிதி தொடர்பான உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பு, ராகுலுக்கும், அவரின் வாடகை செயற்பாட்டாளர்களுக்கும் ஒரு அடியாக இருக்கும். எத்தனை சூழ்ச்சிகளுக்கும் இடையிலும் உண்மை மிளிர்கிறது என்பதை காங்கிரஸும், அதன் கூட்டணிக் கட்சிகளும் உணர வேண்டும்.

பிரதமர் நிவாரண நிதிக்கு நிதியளித்த கோடிக்கணக்கான மக்கள் ராகுல் காந்தி மீது உள்ள கோபத்தை பலமுறை தள்ளுபடி செய்துள்ளனர். அது போன்றுதான் உச்ச நீதிமன்றத்தின் இந்த தீர்ப்பும் இருக்கும் என நினைக்கிறேன்.

பல நூற்றாண்டுகளாக பிரதமர் நிவாரண நிதியை இந்திரா காந்தி குடும்பம் தனது பணமாக கருதி வந்தது. அதுமட்டுமின்றி அந்தப் பணத்தை வெட்கமின்றி, அவர்களின் சொந்த அறக்கட்டளைக்கு மாற்றினார்கள்' எனக் குற்றஞ்சாட்டினார்.

பிரதமர் நிவாரண நிதியை தேசியப் பேரிடர் நிவாரண நிதிக்கு மாற்றுவதற்கு தாக்கல் செய்யப்பட்ட மனுவை உச்ச நீதிமன்றம் தள்ளுபடி செய்து உத்தரவிட்டது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க...அவதூறு பரப்பும் காணொலி: காஷ்மீர் பள்ளத்தாக்கில் தொடரும் போராட்டங்கள்

ABOUT THE AUTHOR

...view details