கரோனா வைரஸ் நெருக்கடியைச் சமாளிக்க பிரதமர் நரேந்திர மோடி எடுத்துவரும் முயற்சிகளைப் பாராட்டிய பாஜக தேசியத் தலைவர் ஜே.பி. நட்டா, ரிசர்வ் வங்கியின் 'ரிவர்ஸ் ரெப்போ' விகிதத்தை குறைப்பது மக்களின் வாழ்வாதாரத்தைப் பாதுகாக்க உதவும் என்று கூறியுள்ளார்.
தற்போதைய நெருக்கடியில் பொருளாதாரத்தை வலுப்படுத்த ரிசர்வ் வங்கி எடுக்கும் ஒட்டுமொத்த நடவடிக்கைகள் பணப்புழக்கத்தை அதிகரிக்கும் எனவும் இது நீண்ட காலத்திற்குப் பயனளிக்கும் எனவும் தெரிவித்துள்ளார்.
விவசாயிகளுக்கு உதவ நபார்டு வங்கிக்கு 25 ஆயிரம் கோடி ரூபாய், இந்திய சிறு தொழில் வளர்ச்சி வங்கிக்கு 15 ஆயிரம் கோடி ரூபாய், தேசிய வீட்டுவசதி வங்கிக்கு 10 ஆயிரம் கோடி ரூபாய் என மத்திய அரசு நிதி நிறுவனங்களுக்கு 50 ஆயிரம் கோடி ரூபாயை கடனாக ரிசர்வ் வங்கி அறிவித்துள்ளதைச் சுட்டிக்காட்டி தனது ட்விட்டர் பக்கத்தில் ஜே.பி. நட்டா பதிவிட்டுள்ளார்.