பாஜக தலைவர் பதவிக்கான தேர்தல் மிக விரைவில நடக்கவுள்ளதாகவும், அதில் ஜே.பி. நட்டா போட்டியின்றி தேர்வு செய்யப்பட அதிக வாய்ப்புள்ளதாகவும் பாஜக நிர்வாகிகள் தெரிவித்துள்ளனர். தேர்தல் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு ஜனவரி 20ஆம் தேதி வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
2019ஆம் ஆண்டு நடைபெற்ற மக்களை தேர்தலில் வென்று ஆட்சியை பிடித்ததும், பாஜக தலைவர் அமித் ஷா உள்துறை அமைச்சராக பொறுப்பேற்றுக்கொண்டார். இதனால் ஜே.பி. நட்டா செயல் தலைவராக நியமிக்கப்பட்டார்.