தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

'ராகுல் காந்தி பாதுகாப்புப் படையின் தரத்தைத் தாழ்த்திப் பேசுகிறார்' - ஜே.பி. நட்டா - india china face off

ஜெய்ப்பூர்: ராகுல் காந்தி பிரதமரைக் கேள்விகேட்பதாக நினைத்துக் கொண்டு பாதுகாப்புப் படையின் தரத்தைத் தாழ்த்திப் பேசுவதாக பாஜக தலைவர் ஜே.பி. நட்டா கூறியுள்ளார்.

rahul nadda
rahul nadda

By

Published : Jun 21, 2020, 4:54 AM IST

கல்வான் பள்ளத்தாக்கில் ஏற்பட்ட மோதலில் ஆயுதங்கள் இல்லாமல் இந்திய வீரர்களை சீனாவுடன் சண்டையிட வைத்து பிரதமர் மோடி இந்தியாவை சீனாவிடம் சரணடைய வைத்துள்ளதாக காங்கிரஸ் கட்சி எம்பி ராகுல் காந்தி குற்றஞ்சாட்டியிருந்தார்.

இந்நிலையில், ராஜஸ்தானில் பாஜக கட்சித் தொண்டர்கள் மத்தியில் காணொலி வாயிலாக பேரணியில் உரையாற்றிய பாஜக தலைவர் ஜே.பி. நட்டா, ராகுல் காந்தியின் விமர்சனத்திற்குப் பதிலளித்துள்ளார்.

அப்போது அவர், "கல்வான் தாக்குதலில் ஏன் நமது படையினர் ஆயுதங்கள் இல்லாமல் சென்றார்கள் என எதிர்க்கட்சியினரில் சிலர், அவர்களின் குறைந்த அறிவின் மூலம் பிரதமரைக் கேள்விகள் கேட்கின்றனர். அதற்கு முன்பு அவர்கள் 1996ஆம் ஆண்டு இந்திய-சீன எல்லையில் பாதுகாப்பு குறித்து போடப்பட்ட ஒப்பந்தத்தைப் படித்துத் தெரிந்துகொள்ள வேண்டும். அவர்கள் பிரதமரைக் கேள்வி கேட்பதாக நினைத்துக்கொண்டு நமது பாதுகாப்புப் படையின் தரத்தை தாழ்த்திப் பேசிவருகின்றனர்" என்றார்.

இதையும் படிங்க:இந்தியா - சீனா மோதல்: காணொலி வெளியிட்டு கேள்வி எழுப்பிய காங்கிரஸ்!

ABOUT THE AUTHOR

...view details