பிகார் மாநில சட்டப்பேரவைத் தேர்தல் மூன்று கட்டங்களாக நடைபெறும் எனத் தேர்தல் ஆணையம் அறிவித்தது. அதன்படி மொத்தம் உள்ள 243 தொகுதிகளுக்கு அக்டோபர் 28, நவம்பர் 3, நவம்பர் 7 ஆகிய தேதிகளில் வாக்குப்பதிவு நடத்தப்பட்டு தேர்தல்களில் பதிவான வாக்குகள் நவம்பர் 10ஆம் தேதி எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்படவுள்ளன.
ஒரு புறம் பாஜக, ஐக்கிய ஜனதா தள கட்சிகள் கூட்டணி அமைத்துள்ள நிலையில், மற்றொரு புறம் காங்கிரஸ், ராஷ்டிரிய ஜனதா தள கட்சிகள் கூட்டணி அமைத்து போட்டியிடவுள்ளன. தேர்தல் நெருங்கிவருவதைத் தொடர்ந்து, பிகார் சென்றுள்ள பாஜக தலைவர் ஜே.பி. நட்டா, தனது தேர்தல் பரப்புரையை தொடங்கியுள்ளார்.