தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

தட்டாஞ்சாவடி இடைத்தேர்தல்: அக்கா மகனை களமிறக்கிய ரங்கசாமி!

புதுச்சேரி: தட்டாஞ்சாவடி இடைத்தேர்தலில் வேட்பாளர் அறிவிப்பதில் மவுனம் காத்து வந்த என்ஆர் காங்கிரஸ் தலைவர் ரங்கசாமி தனது அக்கா மகனுக்குத் தொகுதி ஒதுக்கி உள்ளார்.

By

Published : Mar 25, 2019, 10:53 PM IST

என்ஆர் காங்கிரஸ் வேட்பாளர் நெடுஞ்செழியன்

ஏப்ரல் 18ஆம் தேதி, நடைபெறவுள்ள நாடாளுமன்றத் தேர்தலுடன் புதுச்சேரியில் உள்ள தட்டாஞ்சாவடி தொகுதிக்கும் இடைத்தேர்தல் நடைபெற உள்ளது.

காங்கிரஸ் கூட்டணிக் கட்சி சார்பில் திமுகவிற்கு அந்தத் தொகுதி ஒதுக்கப்பட்டது. திமுக வேட்பாளராக வெங்கடேசன் கடந்த வாரம் அறிவிக்கப்பட்டு, இன்று வேட்புமனு மனு தாக்கல் செய்தார்.

ஆனால், என்ஆர் காங்கிரஸ் கட்சி சார்பில் வேட்பாளர் யார் என்று அறிவிப்பதில் மௌனம் காத்து வந்த அக்கட்சித் தலைவர் ரங்கசாமி இன்று பிற்பகல் வரை வேட்பாளர் யார் என அறிவிக்கப்படாமல் அக்கட்சி நிர்வாகிகள் இடையே மிகுந்த எதிர்பார்ப்பு நிலவியது.

இந்நிலையில், இன்று பிற்பகல் புதுச்சேரி விவிபி நகரில் உள்ள சட்டமன்ற தேர்தலுக்கான கூட்டுறவு பதிவாளர் அலுவலகத்தில் என்ஆர் காங்கிரஸ் கட்சியின் தலைவர் ரங்கசாமி திடீரென வேட்பு மனுத்தாக்கல் அலுவலகம் அருகே காரில் வந்து இறங்கினார்.

பின்னர், ரங்கசாமியும், அவருடைய அக்கா மகன் நெடுஞ்செழியனும் காரில் இருந்து பரபரப்பாக இறங்கி தேர்தல் அலுவலகத்திற்குச் சென்று, வேட்பு மனு தாக்கல் செய்தார்.

இவர்களுடன் முன்னாள் எம்எல்ஏ அசோக் ஆனந்து உடனிருந்தார். இவர் மீது சொத்துக் குவிப்பு வழக்குத் தீர்ப்பு வந்ததின் காரணமாக இந்த தொகுதி காலியானதாக அறிவிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

Rangasamyஎன்ஆர் காங்கிரஸ் வேட்பாளர் நெடுஞ்செழியன்

ABOUT THE AUTHOR

...view details