அமெரிக்க அதிபராக பதவியேற்றுள்ள ஜோ பைடனுக்கு பிரதமர் நரேந்திர மோடி ட்விட்டரில் வாழ்த்து தெரிவித்துள்ளார். அதில், “அமெரிக்காவின் அதிபராக பொறுப்பேற்றுள்ள ஜோ பைடனுக்கு என் வாழ்த்துகள். இந்திய- அமெரிக்க உறவை வலுப்படுத்தும் வகையில் அவருடன் பணியாற்ற எதிர்நோக்குகிறேன்” எனத் தெரிவித்துள்ளார்.
மற்றொரு ட்வீட்டில், “பொதுவான சவால்களை எதிர்கொண்டு உலகளாவிய அமைதி மற்றும் பாதுகாப்பை முன்னேற்றுவதில் ஒற்றுமையுடனும், நெகிழ்ச்சியுடனும் தங்களின் காலத்தில் அமெரிக்காவை வெற்றிகரமாக வழிநடத்த வாழ்த்துகள்” எனத் தெரிவித்துள்ளார்.
அடுத்த ட்வீட்டில், “இந்தியா-அமெரிக்க கூட்டுப்பகிர்வு மதிப்புகளை அடிப்படையாகக் கொண்டது. இந்தியா- அமெரிக்கா உறவை புதிய உச்சத்துக்கு கொண்டு செல்வோம்” எனத் தெரிவித்துள்ளார். தொடர்ந்து, தமிழ்நாட்டை பூர்விகமாக கொண்ட கமலா ஹாரிஸிற்கு வாழ்த்து தெரிவித்துள்ளார் பிரதமர் நரேந்திர மோடி.