உத்தரப் பிரதேச மாநிலம் அமேதி மாவட்டத்தில் உள்ள பரௌலியா கிரமாத்தின் முன்னாள் தலைவரும், மத்திய அமைச்சர் ஸ்மிருதி இரானியின் நெருங்கிய சகாக்களில் ஒருவராகவும் நம்பப்படும் சுரேந்திர சிங் நேற்று மாலை 3 மணி அளவில் இரண்டு மர்ம நபர்களல் சுட்டுக்கொல்லப்பட்டார்.
'ஸ்மிருதி இரானியை ஆதரித்ததால் என் கணவர் கொலை செய்யப்பட்டார்' - மனைவி குற்றச்சாட்டு - amethi murder
லக்னோ: அமேதி மக்களவைத் தொகுதியில் போட்டியிட்ட மத்திய அமைச்சர் ஸ்மிருதி இரானியை ஆதரித்ததால் சுரேந்திர சிங் கொல்லப்பட்டதாக அவரது மனைவி வேதனை தெரிவித்துள்ளார்.
surendar wife
இது அமேதி மாவட்டத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில், அப்பகுதியில் காவல் துறையினர் குவிக்கப்பட்டுள்ளனர். இந்நிலையில், சுரேந்தர் சிங்கின் கொலை குறித்து அவரது மனைவி ருக்மிணி சிங் கூறுகையில், "பகையாளிகள் என்று அவருக்கு யாரும் இல்லை. அவர் ஸ்மிருதி இரானியை ஆதரித்த காரணத்திற்காகவே கொல்லப்பட்டுள்ளார். அரசியல் காரணங்களுக்காகவே அவர் கொல்லப்பட்டார்" என்று குற்றஞ்சாட்டியுள்ளார்.
Last Updated : May 26, 2019, 10:57 PM IST