கேரள மாநிலம் கோழிக்கோடு மாவட்டம் கூடத்தாயி கிராமத்தைச் சேர்ந்தவர் ஜூலி தாமஸ். பெற்றோரின் கட்டாயத்தின் பேரில் உறவினரான ராய் தாமஸ் என்பவரை 14 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் செய்துகொண்டார். திருமண வாழ்க்கை சரியாக அமையாத நிலையில், கணவரின் அண்ணன் மகன் சாஜூவை ஜூலிக்கு பிடித்துள்ளது. இருவரும் குடும்பத்தை என்ன செய்வது என்று யோசித்தனர். இறுதியில் கூண்டோடு குடும்பத்தினரின் கதையை முடித்துவிடலாம் என முடிவெடுத்த ஜூலி, அதற்காக நகைப்பட்டறையில் பணிபுரியும் தனது நண்பர் சாஜூவிடம் இருந்து சயனைடை வாங்கியுள்ளார்.
மட்டன்சூப் சாப்பிடுவது வழக்கம்:
ஜூலி மாமனார் குடும்பத்தில் இரவு சாப்பிட்ட பிறகு மட்டன் சூப் சாப்பிடுவது வழக்கம். இதை அறிந்த ஜூலி அதை பயன்படுத்தி அனைவரையும் தீர்த்துக்கட்ட முடிவுசெய்தார். ஆனால் ஒரே நேரத்தில் அனைவரையும் கொலை செய்துவிட்டால் தன்மீது சந்தேகம் வரும் என யோசித்த ஜூலி கால இடைவெளியில் திட்டத்தை அரங்கேற்ற முடிவு செய்துள்ளார்.
மட்டன் சூப்பை கையில் எடுத்த ஜூலி:
ஏன்னென்றால் யாருக்கும் சந்தேகம் ஏற்படாமல் இருந்தால் தான் சொத்துகளை தமது பெயருக்கு மாற்றமுடியும் என்பது அதற்கு ஒரு காரணம். தனது திட்டத்தில் முதலில் மாமியாரான அன்னம்மாவுக்கு கடந்த 2002ஆம் ஆண்டு மட்டனில் சயனைடை கலந்து கொடுத்துள்ளார். அதை வாங்கிக் குடித்த சிறிது நேரத்தில் அன்னம்மா உயிரிழந்தார். இதேபோல் 2008ஆம் ஆண்டு மாமனார் டாம் தாமஸையும், 2011ஆம் அண்டு கணவர் ராய் தாமஸையும் அதே பாணியில் சயனைடு கொடுத்து கொலை செய்துள்ளார் ஜூலி.
காவல்நிலையத்தில் புகார்:
அவரது திட்டத்தின்படி அனைத்தும் நடந்துகொண்டிருக்க அன்னம்மாவின் சகோதரர் மேத்யூவுக்கு ஜூலியின் நடவடிக்கைகள் சந்தேகத்தை ஏற்படுத்தவே, அவர் மீது காவல் நிலையத்தில் புகார் கொடுத்துள்ளார். இந்நிலையில், 2014ஆம் ஆண்டு மேத்யூவுக்கும் சயனைடு கலந்துகொடுத்து கதையை முடிக்க பிரச்னை முடிந்துள்ளது. தன் வீட்டில் அனைவரையும் கொலை செய்தபின் ஜூலியின் கவனம் சாஜூவின் மனைவி சிலி மற்றும் அவரது 10 மாத குழந்தையின் மீது திரும்பியது. 2016ஆம் ஆண்டு அவர்களுக்கும் சயனைடு கலந்த மட்டன் சூப்பை கொடுத்து கதையை முடித்துள்ளார்.