டெல்லி:வேளாண் மசோதாக்கள் தொடர்பாக மாநிலங்களவையில் நேற்று(செப்.20) அமளியில் ஈடுபட்ட எட்டு எம்பிக்களை இடைநீக்கம் செய்து உத்தரவிட்டதற்கு காங்கிரஸ் தலைவர்கள் கண்டனம் தெரிவித்துள்ளனர்.
நாடாளுமன்றத்தின் மழைக்காலக் கூட்டத்தொடர் பரபரப்பாக நடந்து வருகிறது. நேற்று நடந்த மாநிலங்களவை கூட்டத்தில் வேளாண் மசோதா நிறைவேற்றத்திற்கு எதிராக எதிர்க்கட்சியினர் பலரும் அமளியில் ஈடுபட்டனர். திரிணாமுல் காங்கிரஸ் கட்சி எம்பி டெரிக் ஓ பிரையன், சபை தலைவர் இருக்கைக்குச் சென்று மசோதா நகலை கிழித்தெறிந்தார்.
இதனைத் தொடர்ந்து, இன்று(செப்.21) மாநிலங்களை தலைவர் வெங்கய்யா நாயுடு அமளியில் ஈடுபட்ட 8 எம்பிக்களை இடைநீக்கம் செய்தார். இதற்கு பலரும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். இதுகுறித்து காங்கிரஸ் கட்சி முன்னாள் தலைவர் ராகுல் காந்தி தனது ட்விட்டர் பக்கத்தில், ''ஜனநாயக இந்தியாவில் அடக்குமுறை தொடர்ந்து வருகிறது. முதலில் பேசவிடாமல் தடுத்தனர். இப்போது நாடாளுமன்ற உறுப்பினர்களை இடைநீக்கம் செய்துள்ளனர்.