மாநிலங்களவையில் முத்தலாக் தடை மசோதாவுக்கு 99 பேர் ஆதரவாகவும், 84 பேர் எதிராகவும் வாக்களித்தனர்.
முத்தலாக் தடை மசோதாவுக்கு குடியரசுத் தலைவர் ஒப்புதல்
டெல்லி: நாடாளுமன்றத்தில் முத்தலாக் தடை மசோதா நிறைவேறியதையடுத்து, குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் அதற்கு ஒப்புதல் அளித்துள்ளார்.
முத்தலாக் தடை மசோதாவிற்கு குடியரசுத் தலைவர் ஒப்புதல்!
எதிர்க்கட்சிகளின் கடும் எதிர்ப்புகளுக்கு மத்தியில், மூன்று முறை தலாக் என்றுக்கூறி விவாகரத்து செய்யும் நடைமுறையை தடை செய்து வகையில் பாஜக அரசு மசோதா தாக்கல் செய்தது.
முத்தலாக் தடை மசோதா நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் நிறைவேறியதையடுத்து, இதனை குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் ஒப்புதல் அளித்துள்ளார். இதைத் தொடர்ந்து முத்தலாக் தடை சட்ட அரசாணையும் வெளியிடப்பட்டது.