தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

'இந்திய இஸ்லாமியர்கள்தான் மகிழ்ச்சியானவர்கள்' - ஆர்.எஸ்.எஸ். தலைவர்!

புவனேஷ்வர்: இந்தியாவில் வாழும் இஸ்லாமியர்கள்தான் மகிழ்ச்சியானவர்கள் என ஆர்.எஸ்.எஸ். தலைவர் மோகன் பகவத் தெரிவித்துள்ளார்.

By

Published : Oct 13, 2019, 1:45 PM IST

RSS Chief

ஒடிசா மாநிலம் புவனேஷ்வரில் ஆர்.எஸ்.எஸ். அமைப்புச் சார்பாக நிகழ்ச்சி ஒன்று நடத்தப்பட்டது. இதில், கலந்து கொண்டு பேசிய அந்த அமைப்பின் தலைவர் மோகன் பகவத், "இந்தியாவில் வாழும் இஸ்லாமியர்கள்தான் மகிழ்ச்சியானவர்கள். பல்வேறு மதத்தில் நம்பிக்கை உடையவர்கள் இந்தியாவில் தஞ்சம் அடைவதற்கு காரணம் இந்து கலாசாரம்.

சரியான பாதையிலிருந்து நாடு விலகும்போதும், குழப்பத்தில் இருக்கும்போதும், மக்கள் உண்மையைத் தேடி இந்தியாவிற்கு வருகின்றனர். யூதர்கள் துரத்தப்பட்டபோது அவர்கள் இந்தியாவில்தான் தஞ்சம் அடைந்தார்கள். பார்சிக்கள் இந்தியாவில்தான் பாதுகாப்பாக உள்ளனர். மொழி, நாடு ஆகியவற்றை கடந்து கலாசாரத்தை இந்து மதம் பறைசாற்றுகிறது" என்றார்.

இஸ்லாமியர்களுக்கு எதிராக தொடர் வன்முறைச் சம்பவங்கள் நிகழ்ந்து வரும் நிலையில், ஆர்.எஸ்.எஸ். தலைவரின் கருத்து முரணாக உள்ளது என சமூக ஆர்வலர்கள் குற்றஞ்சாட்டியுள்ளனர்.

இதையும் படிங்க: மோடியின் தாயாருடன் குடியரசுத் தலைவர் சந்திப்பு!

ABOUT THE AUTHOR

...view details