பாரமுல்லா: ஜம்மு-காஷ்மீரில் இந்துக்கள், முஸ்லிம்கள், சீக்கியர்கள் ஆகியோர் எப்போதும் ஒன்றாக இருந்து சகோதரத்துவ உணர்வை நிலைநாட்டியுள்ளனர்.
ஜம்மு காஷ்மீர் கோயில்களைப் பாதுகாக்கும் இஸ்லாமியர்கள்!
காஷ்மீர் பள்ளத்தாக்கில் இருந்து கோயில் பண்டிதர்கள் வெளியேறிய பின்னர், கவனிப்பும், பராமரிப்பும் இல்லாததால் கோயில்கள் பாழடைந்தன. தற்போது அவைகளை இஸ்லாமியர்களும், சீக்கியர்களும் பாதுகாத்து வருவதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
இருப்பினும், 1990களில் காஷ்மீர் பள்ளத்தாக்கில் சாதகமற்ற சூழல்கள் இருந்ததால், இங்கு சட்டம் ஒழுங்கு சீர்குலைந்தது. இதன் விளைவாக, காஷ்மீர் பண்டிதர்கள் பள்ளத்தாக்கில் இருந்து வெளியேற வேண்டியிருந்தது. அதன்பிறகு பள்ளத்தாக்கிலுள்ள இந்து கோயில்கள் கவனிப்பும், பராமரிப்பற்றும் பாழடைந்தன.
இச்சூழலில், வடக்கு காஷ்மீரின் பாரமுல்லா மாவட்டத்தில் உள்ள கோயில்களை, அங்கு வாழும் இஸ்லாமியர்களும், சீக்கியர்களும் பாதுகாத்து வருகின்றனர். இங்கு இவர்களால் பாதுகாக்கப்பட்டுள்ள பாரமுல்லா நகரத்தின் கன்லி பாக், கான்புராவில் உள்ள கோயில்களில் ஆயிரக்கணக்கான ஆண்டுகள் பழமையான சிவ லிங்கம் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.