தீபாவளி பண்டிகையின்போது வாரணாசியில் பாரம்பரியமாக ஸ்ரீ ராமருக்கு ஆரத்தி எடுத்து பெண்கள் பிரார்த்தனை செய்வது வழக்கம். அந்தவகையில், இந்தாண்டும் இந்த வழக்கமான பாரம்பரிய நடைமுறை கடைப்பிடிக்கப்பட்டது. அப்போது, விஷால் பாரத் சன்ஸ்தானுடன் தொடர்புடைய இஸ்லாமிய பெண்கள், ஸ்ரீ ராமருக்கு ஆரத்தி எடுத்து பிரார்த்தனை செய்தார்கள்.
ஸ்ரீ ராம் மகார்தி நிகழ்ச்சியின் முதன்மை விருந்தினராக மஹந்த் பாலாக் தாஸ் ஜி மகாராஜ் கலந்துகொண்டார். கடந்த 14 ஆண்டுகளாக, வாரணாசியின் இஸ்லாமிய பெண்கள் தீபாவளி, ராம் நவாமி ஆகியவற்றில் தொடர்ந்து மகா ஆரத்தி செய்து, மத, இன நல்லிணக்கம், சகோதரத்துவம் மற்றும் இந்திய கலாசார ஒற்றுமையை வெளிப்படுத்துகின்றனர்.