கர்நாடக மாநிலம் ஹூப்ளி கோபன்கோபாவில் வசிக்கும் அருண் யாதவா நீண்ட காலமாக விநாயகர் சிலையை உருவாக்கும் தொழிலில் ஈடுபட்டுள்ளார். வறுமையின் கோர பிடியிலிருந்து மீள வழி தேடிய சுமன் ஹவேரிக்கு அருண், சிலை செய்ய வாய்ப்பு கொடுத்தார்.
இதையடுத்து, இஸ்லாமிய மதத்தைச் சேர்ந்த சுமன் ஹவேரி விநாயகர் சிலைகளை தயாரிப்பதில் ஈடுபட்டுள்ளார். இந்த வேலை சுமனின் வாழ்க்கை, பிரகாசிக்க உதவியுள்ளது.