தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

மத நல்லிணக்கத்தை எடுத்துரைக்கும் இஸ்லாமியர்கள் - Stranded Migrants

பாட்னா: ஊரடங்கால் பாதிக்கப்பட்ட நான்கு இந்துக்களுக்கு, இஸ்லாமியர்கள் தங்கள் வீட்டிலேயே தங்குவதற்கு இடம் கொடுத்து உணவு வழங்கி மத நல்லிணக்கத்தை போற்றியுள்ளனர்.

இஸ்லாமியர்கள்
இஸ்லாமியர்கள்

By

Published : Apr 22, 2020, 5:14 PM IST

கரோனா வைரஸ் நோய் இந்தியாவை ஆட்டிப்படைத்துவருகிறது. பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்துவரும் இந்த இக்கட்டான சூழ்நிலையில், மத நல்லிணக்கத்தை போற்றும் சம்பவம் பிகாரில் நிகழ்ந்துள்ளது.

உத்தர பிரதேசத்தைச் சேர்ந்த தர்மேந்திராவும் அவரின் நண்பர்களும் பிகார் மாநிலம் கோபால்கஞ்ச் மாவட்டத்தில் உள்ள ஒரு இனிப்பகத்தில் பணிபரிந்து வந்துள்ளனர். கரோனா வைரஸ் நோயை கட்டுப்படுத்தும் விதமாக அமல்படுத்தப்பட்டுள்ள ஊரடங்கால் இனிப்பகம் மூடப்பட்டுள்ளது. இதனால், அவர்களின் வாழ்வாதாரம் பெரும் பாதிப்படைந்துள்ளது.

தங்கள் மாநிலத்துக்குச் செல்ல அவர்கள் விருப்பப்பட்டபோதிலும், அங்கு செல்வதற்கோ உணவு வாங்குவதற்கோ அவர்களிடம் பணமில்லை. இம்மாதிரியான இக்கட்டான சூழ்நிலையில், எதிர்பாராத இடத்திலிருந்து உதவி கிடைத்துள்ளது. ஜங்காலியா கிராமத்தைச் சேர்ந்த பர்வேஸ் அலாம், சோனு அலி ஆகியோர் அவர்களுக்கு தங்கள் வீட்டிலேயே தங்குவதற்கு இடம் கொடுத்து உணவு வழங்கியுள்ளனர்.

இது குறித்து தர்மேந்திரா கூறுகையில், "வாழ முடியாமல் தவித்து வந்த நிலையில், அனைத்து உதவிகளும் அவர்கள் செய்தனர். தங்கள் வீட்டிலிருப்பது போன்று உணர்கிறோம்" என்றார்.

இதையும் படிங்க: தாய்க்கு கரோனா: குழந்தையை காணொலி அழைப்பில் பார்த்த தாய் - நெகிழ்ச்சி சம்பவம்!

For All Latest Updates

ABOUT THE AUTHOR

...view details